×

முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கிறிஸ்தவ, இஸ்லாமிய, செங்கோல் ஆதினம், பல்வேறு சங்க நிர்வாகிகள் ஆதரவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை கிறிஸ்தவ-இஸ்லாமிய-செங்கோல் ஆதினம் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய சென்றுள்ள முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று, தூத்துக்குடியில் கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து, இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அந்தோணி சாமி ஆயர், பர்னபாஸ் அடிகளார், அருட்தந்தை எஸ்.மரியதாஸ், டி.வி.பி.பொன்ராஜ், ஹாஜி செய்யது அகமது, ஹாஜி எம்.கே.எம்.செய்யது அகமது கபீர், ஹாஜி எம்.கே.எம்.அகமது ஷாபி, ஹாஜி நவாஸ்கான், ஹாஜி எப்.காதர் முஹைதீன், ஹாஜி எம்.ஷேக் அப்துல்லா, மீனாட்சி சுந்தரம், செல்லையா ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதுபோல, கன்னியாகுமரி மாவட்டத்தில் பால பிரஜாதிபதி அடிகளார், நசரேன் சூசை ஆயர், அருட்சகோதரிகள், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி தென்னிந்திய திருச்சபை திருமண்டல பேராயர் லே-செக்ரடரி, செங்கோல் ஆதினம், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், ஆல் இந்தியா சேம்பர் ஆப் காமர்ஸ், ஐக்கிய வியாபாரிகள் சங்கம்.

மீனவர் நல சங்கம், தூத்துக்குடி சிஎஸ்ஐ திருச்சபையினர் ஆகியோர் நேரில் சந்தித்து, தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபடுவதாகவும் உறுதி அளித்தனர். அப்போது, திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதி வேட்பாளருமான கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, நெல்லை திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணியம் ஆகியோர் உடனிருந்தனர்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கிறிஸ்தவ, இஸ்லாமிய, செங்கோல் ஆதினம், பல்வேறு சங்க நிர்வாகிகள் ஆதரவு appeared first on Dinakaran.

Tags : Christian ,Islamic ,Senggol Adinam ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Songol Adinam ,India alliance ,Kanyakumari ,Tirunelveli ,Thoothukudi ,Ramanathapuram ,
× RELATED வீட்டு காவலில் இருந்த இம்ரான்கானின் மனைவி சிறைக்கு மாற்றம்